மதுரையில் தென்னிந்திய மகப்பேறு டாக்டர்கள் மாநாடு
மதுரை: தென் இந்திய மகப்பேறு டாக்டர்களின் முதல் மாநாடு வருகிற 15 முதல் 17ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது.
மதுரை அரசு கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவப் பிரிவு தலைமை பேராசிரியர் டாக்டர் ரேவதி ஜானகிராமன், டாக்டர்கள் பர்வதவர்த்னி, தில்ஷாத், ரேவதி கயிலைராஜன் ஆகியோர் கூறியதாவது:
தென் இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்டது மதுரை மகப்பேறு மருத்துவ கழகம்தான். இதில் சுமார் 220க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த மகப்பேறு டாக்டர்கள் சேர்ந்து தக்ஷிண் என்ற கூட்டமைப்பை கடந்த 2000ல் தொடங்கப்பட்டது.
இளைய மருத்துவர்களை ஊக்குவிப்பது மற்றும் தென்னிந்திய டாக்டர்களை இந்திய அளவில் முன்னிலைப்படுத்துவதுதான் இந்த கூட்டமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்தில் மாநாடு நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டு மதுரையில் முதல் முதலாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய மகப்பேறு டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மகப்பேறு மருத்துவ கழகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது. முதல் நாள் டாக்டர்களுக்கான பயிலரங்கம் மதுரை அரசு மருத்துவமனையில் நடக்கிறது.
ஆகஸ்டு 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாடு தல்லாகுளம் பகுதியில் லட்சுமி சுந்தரம் அரங்கில் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள் கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் முறைகள் பற்றியதாகும்.
-
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications