இந்திய வாடகை தாய்..ஜப்பான் குழந்தை: பாட்டியிடம் ஒப்படைப்பு!
டெல்லி: இந்திய வாடகை தாய்க்குப் பிறந்த ஜப்பான் தம்பதியரின் பெண் குழந்தையை, அதன் பாட்டியிடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்தவர் யமடா. இவர் ஒரு மருத்துவ நிபுணர். இவரது மனைவி குழந்தை பெறும் தன்மை இல்லாமல் தவித்தார்.
எனவே வாடகை தாய் மூலம் அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இந்திய நண்பர் ஒருவர் உதவியுடன் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரை வாடகை தாயாக அமர்த்தி கருத்தரிக்கச் செய்தனர்.
குழந்தை பிறக்கும் நேரத்தில் யமடா தம்பதிகள், குடும்பப் பிரச்சினை காரணமாகப் பிரிந்து விட்டனர். கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.
இதற்கிடையில், அந்த வாடகைத் தாய், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றார். குழந்தை இப்போது மருத்துவனையில் நலமாக இருக்கிறது, வெளியில் அவர்களது பெற்றோர் போடும் சண்டையை அறியாமல்.
குழந்தைப் பிறந்த செய்தி அறிந்ததும் வாங்கிக் கொள்ள டாக்டர் யமடா ஜெய்ப்பூர் வந்தார். மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்துச் செல்ல அவர் முயன்ற போது டாக்டர்கள் மறுத்துவிட்டார்களாம்.
காரணம் விவாகரத்து பெற்ற தம்பதியரில் கணவர் மட்டுமே தனியாக ஒரு குழந்தையைப் பெற்றுச் செல்வதை இந்திய சட்டம் அனுமதிப்பதில்லை. இதனை இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் யமடாவுக்கு விளக்கினர்.
உடனே டோக்கியோவில் உள்ள தனது முன்னாள் மனைவியை அணுகி, குழந்தையை வாங்கி தன்னிடம் ஒப்படைத்துவிட்டால் போதும் எனக் கோரிக்கை விடுத்தாராம். ஆனால் அந்தப் பெண்மணி அதற்கு ஒப்புக் கொள்ளாததோடு, குழந்தையைப் பார்க்கக் கூட வர மறுத்து விட்டாராம். இதற்கு பதில் மனு தாக்கல் செய்வதற்குள் அவரது விசா காலம் முடிந்துவிட்டதால் அவர் ஜப்பான் சென்றுவிட்டார்.
இதற்கிடையே, ஜப்பானி பெண்ணின் தாயும் குழந்தையின் பாட்டியுமான இமிகோ தற்போது இந்தியா வந்துள்ளார், வழக்கு முடியும் வரையில் குழந்தை மான்ஜியை தன் பொறுப்பில் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இமிகோவிடம் குழந்தையை ஒப்படைக்க உத்தரவிட்டனர். இதன்படி குழந்தை மான்ஜி பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications