சிம்கார்டு வாங்க இனி சாட்சிகள் வேண்டும்!
டெல்லி: கல்யாணத்துக்கு மட்டுமல்ல, இனி செல்போனுக்கு மெமரி கார்டு வாங்கவும் இரு சாட்சிகள் வேண்டும்.
ஆண், இனிமேல் யாரேனும் இரு நபர் அடையாள அட்டைக் கொடுத்து சாட்சி கையெழுத்து போட்டால்தான்தான் சிம்கார்டு வாங்க முடியும்!
நாட்டில் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் சதிவேலைகளுக்கான தகவல் பரிமாற்றங்களில் இன்றைக்கு செல்போன்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர்நிலைக் கூட்டத்தில் சமீபத்தில் விரிவாக அலசப்பட்டது.
தீவிரவாதிகளின் கையில் செல்போன்கள் கிடைப்பதைத் தடுக்க உடனடி நடிவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, இனி செல்போன் இணைப்புக்கு சிம் கார்டு வாங்குவோர் தங்கள் முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று கொடுத்தால் மட்டும் போதாது. வங்கிகளில் புதுக் கணக்கு தொடங்கும்போது கேட்கப்படுவது போல் அதே செல்போன் நிறுவனத்தில் ஏற்கெனவே இணைப்பு வைத்துள்ள இரண்டு நபர்களின் உத்தரவாதக் கையெழுத்து பெற்றுத் தர வேண்டும்.
அடுத்து, சிம் கார்டு மையங்களில் வெப் கேமிரா பயன்படுத்தி வாடிக்கையாளரை புகைப்படம் எடுக்க வைக்க வேண்டும். அதை அந்தந்த பகுதியிலுள்ள பாதுகாப்பு ஏஜென்சியிடம் அவ்வப்போது கடைக்காரர் சமர்ப்பிக்க வேண்டும்.
விரைவில் இந்த விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து அறிவிப்பு வெளியிடும் என்று உள்துறை அமைச்சரக செயலாளர் மதகர் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு ஒருவரது சிம்கார்டு, சமூக விரோதிகள் மற்றும் நாச வேலைகாரர்களிடம் சிக்காமல் இருப்பதுதான் மிகவும் அவசியம்.
யாராவது ஒரு ஆசாமி உங்கள் செல்போனைத் திருடி மெமரி கார்டை மட்டும் எடுத்துக் கொண்டால்கூட நீங்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. கார்டு தவறான முறையில் பயன்படுத்துவது தெரிந்தால் அது யாராக இருந்தாலும் சிம்கார்டு வைத்திருப்பவர்தான் முதலில் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனால் இனி செல்போனை விட சிம் கார்டுகளைத்தான் அதிக கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டி வரும்!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications