புனுகு பூனை-அனுமதி கோரும் திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான வளாகத்தில் புனுகுப் பூனைகளை வளர்க்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோவில் நிர்வாக அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய புனுகு எனும் வாசனைத் திரவியம் தேவைப்படுகிறது. இத்துடன் குங்குமப்பூ, சந்தனம், கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த அபிஷேகத்தைச் செய்கிறார்கள்.
இதில் புனுகு கிடைப்பது தற்போது மிகவும் சிரம்மாகியுள்ளதாம். இந்த வாசனத் திரவியத்தை புனுகுப் பூனைகளின் வயிற்றுப் பகுதியில் உருவாகும் ஒருவித பிசினிலிருந்து தயாரிக்கிறார்கள்.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூர்ணாபிஷேகத்துக்கே சற்றே சிக்கல் ஏற்பட்டுவிட்டதாம்.
புனுகு கொண்டு அபிஷேகம் செய்வதால், சுவாமி சிலை வழவழப்பாக அதே சமயம் கீறல்கள் ஏற்படாமல் பளிச்சென்றும் காட்சி தருமாம். இது கோயில் பராமரிப்பு சாஸ்திரம் என்பதால் அதை சரியாகக் கடைப்பிடிக்க கோவிலின் நிர்வாகம் அதிக செலவில் புனுகை வாங்கி வருகிறது.
இதைவிட புனுகுப் பூனைகளை வாங்கி வளர்ப்பதால் தேவையான அளவுக்கு புனுகு கிடைக்கும் என முடிவு செய்து மத்திய அரசின் அனுமதி கோரியுள்ளது தேவஸ்தானம்.
அழிந்து வரும் அரிய வகை விலங்குகள் பட்டியலில் உள்ள புனுகுப் பூனைகள் வளர்க்கவும், புனுகு சேகரிக்கவும் மத்திய அரசின் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications