திமுக 3வது அணிக்கு வர வேண்டும்- மார்க்சிஸ்ட்
திண்டுக்கல்: முதல்வர் கருணாநிதி, 3வது அணிக்கு வர வேண்டும். காங்கிரஸ் அணியிலிருந்து விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட வரதராஜன் பேசுகையில், எனது வாழ்வில் இது முக்கியமான விழா. அமெரிக்க ஏகாதிபத்தியத்ைத எதிர்த்து அன்று தியாகிகள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அப்படிஒரு மாபெரும் போராட்டத்ைத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது.
மத்திய அரசின்குறைந்தபட்ச செயல் திட்டம் செயலிழந்ததால் விலைவாசி உயர்ந்து விட்டது. மதவெறி, அணு சக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகிய மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதற்காக பாஜக, காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறும் 3வது அணியில் திமுகவும் இணைய வேண்டும். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி பரிசீலிக்க வேண்டும் என்றார்.
-
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications