கள்ளச் சாராயம் விற்க ஏலம்!-நாட்டாமை கைது
தர்புரி: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கள்ளச் சாராயம் விற்க ஏலம் விட்ட ஊர் நாட்டாமையை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ளது ஈ.பி. தண்டாமலை. இந்த கிராமத்தில் கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனையாகி வந்தது.
இதனால் சாராய விற்பனையை 'முறைப்படுத்த', ஏலம் நடத்த ஊர் நாட்டாமை முனுசாமி முடிவு செய்தார். அதன் பேரில் முனுசாமி தலைமையில் ஊர் கூட்டம் கூட்டி சாராயம் விற்க ஏலம் விடப்பட்டது.
ஏலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் ராமன், சின்ராஜ், ரத்தினம்மாள், முடாக் ஆகியோர் ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வைரக்கண்ணு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஈ.பி. தண்டாமலை கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்க ஊர் நட்டாமை ஏலம் விட்டது உறுதியானது. அதன் பேரில் முனுசாமி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உதவியாகவும், சாராயம் விற்க ஏலம் எடுத்தவர்களுமான சாராய வியாபாரிகள் ராமன், சின்ராஜ், ரத்தினம்மாள், முடாக் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளச்சாராயத்திற்கு பலரை பறி கொடுத்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை விற்க ஏலம் விடப்பட்ட சம்பவம் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications