Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஷாரப்புக்காக பேச்சு நடத்தும் ராணுவ தளபதி

Subscribe to Oneindia Tamil

Musharraf
இஸ்லாமாபாத்: முஷாரப் விவகாரம் தொடர்பாக அவருக்கும், ஆளும் கூட்டணிக்கும் இடையே, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

முஷாரப்பை பதவியிலிருந்து விரட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி முடிவெடுத்து விட்டது. ஏற்கனவே முஷாரப் பதவி விலக வேண்டும் என்று கோரி பாகிஸ்தானின் 3 மாகாணங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன. அடுத்து நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை ஆளும் கூட்டணி தாக்கல் செய்யவுள்ளது.

அதற்குள் முஷாரப் பதவியிலிருந்து விலக விட வேண்டும் எனவும் ஆளும் கூட்டணி எச்சரித்துள்ளார். ஆனால் தனது முடிவில் முஷாரப் பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த நிலையில், அடுத்த வாரம் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்போ அல்லது அடுத்த 72 மணி நேரத்திற்குள்ளாகவோ முஷாரப் ராஜினாமா செய்யாவிட்டால் மிகப் பெரும் சிக்கல் ஏற்படும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறியுள்ளது.

அதேசமயம், முஷாரப் 72 மணி நேரத்திற்குள் விலகி விடுவார் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முஷாரப் பதவி விலகுவது தொடர்பாக ராணுவத் தளபதி கயானியின் உதவியையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி நாடவுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், ஒருவேளை முஷாரப் பதவி விலக மறுத்தால், ராணுவத் தளபதியை அணுகும் நிலை ஏற்படும். அவர் மூலம் அரசியல் குழப்பத்திற்குத் தீர்வு காண முயற்சிக்கப்படும் என்றார்.

இன்னொரு தரப்பு கூறுகையில், ஏதாவது ஒரு ஒப்பந்தத்திற்கு முஷாரப் முன்வர வேண்டும். இதுதொடர்பாக ஆளும் கூட்டணி, ராணுவத் தளபதி கயானியை அணுகும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஆனால் ஒரு முன்னாள் அதிபருக்குரிய அந்தஸ்து, பலன்கள், சட்டப்பூர்வ பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கிய ஒப்பந்தத்தை தவிர வேறு எதற்கும் உடன்பட மாட்டேன் என்று முஷாரப் கூறி வருவதாக தெரிகிறது. தன் மீது வழக்கு, தண்டனை போன்றவற்றை ஏற்க முடியாது எனவும் முஷாரப் கூறி வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே நவாஸ் ஷெரீப், முஷாரப் செய்த செயல்களுக்கு அவரை அப்படியே விட்டு விட முடியாது என காட்டமாக கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதை மனதில் கொண்டே, 'டீசன்ட்'டாக தன்னை நடத்தினால் மட்டுமே பதவி விலகுவேன் என முஷாரப் கூறி வருவதாகத்
தெரிகிறது.

ஆனால் முதலில் பதவி விலக வேண்டும். அவர் விரும்பும் நாட்டுக்குப் போக முஷாரப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஆளும் கூட்டணி வற்புறுத்தி வருகிறது. இதனால் குழப்பம் நீடிக்கிறது.

குற்றப்பத்திரிக்கை ரெடி

இதற்கிடையே, முஷாரப்புக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை ஒன்றை ஆளும் கூட்டணி தயாரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள கண்டனத் தீர்மானத்துடன் இந்த குற்றப்பத்திரிக்கையும் இணைத்து தாக்கல் செய்யப்படும்.

முஷரப்புக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை தற்போது பாகிஸ்தான் சட்ட அமைச்சரிடம் வந்துள்ளது. அடுத்து அதன் நகல்கள், அனைத்து கூட்டணிக் கட்சிகளிடமும் வழங்கப்படும்.

அதன் பின்னர் கண்டனத் தீர்மானத்துடன் இணைத்து இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த குற்றப்பத்திரிக்கையில் கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பயங்கர குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தா?:

இந்த நிலையில், முஷாரப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்படாமல் தடுக்க, முன்கூட்டியே அவரை பத்திரமாக சவூதிக்கு கொண்டு வர சவூதி மன்னர் முயற்சியில் இறங்கியுள்ளார்.

முஷாரப் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சவூதி அரசு அஞ்சுகிறது. எனவே முஷாரப்பை பத்திரமாக பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றி சவூதி அல்லது துபாய் போன்ற நாடுகளுக்கு அவரை அனுப்பி வைக்க சவூதி மன்னர் முயல்கிறார்.

இதுதொடர்பாக சவூதி இளவரசர் அப்துல் அஜீஸ் முஷாரப்பை சந்தித்துப் பேசியுள்ளதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+