சென்னையில் மீண்டும் பெட்ரோல்-டீசல் பற்றாக்குறை
சென்னை: சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரை நிலை குலைய வைத்த பெட்ரோல், டீசல் பஞ்சம்மறுபடியும் திரும்பியுள்ளது. நேற்று முதல் பெட்ரோல், டீசலுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலை அதிகமான பிரீமியம் வகை பெட்ரோல் மட்டுமே விற்கப்பட்டது. சாதாரண வகை பெட்ரோல், டீசல் அறவே நிறுத்தப்பட்டது. பின்னர் பிரீமியம் வகை பெட்ரோல், டீசலும் கூட நின்று போனது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த நிலை காணப்பட்டது.
இந்த நிலையில்,நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் சென்னைக்குத் திரும்பியுள்ளது. நேற்று காலை முதல் பல விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்லை என்று கூறி கயிற்றைக் கட்டி மூடி விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாலை வாக்கில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்ைல என்ற வாசகம் காணப்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் திரும்பி விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பாதிக்கும் மேலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போதிய சப்ளை இல்லை என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காரணம் கூறப்படுகிறது. சப்ளை வந்தால்தான் விநியோகம் சுமூகமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களில் பெருமளவில் கூட்டம்காணப்படுகிறது. திடீரென பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதால் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்பட்டது.
-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications