காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் சிரஞ்சீவி இன்று யாகம்
காஞ்சிபுரம்: புதுக் கட்சி தொடங்கவுள்ள தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று தனது அரசியல் வாழ்க்கை வெற்றி பெற வேண்டி யாகம் நடத்துகிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய கட்சியை வருகிற 26ம்தேதி தொடங்கவுள்ளார். அன்றைய தினம் திருப்பதியில் நடைபெறவுள்ள பிரமாண்ட கூட்டத்தில் கட்சிப் பெயர், கொடி, கொள்கை ஆகியவற்றை அவர் வெளியிடவுள்ளார்.
அதற்கு முன்பாக கட்சியும், அரசியல் வாழ்க்கையும் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிரஞ்சீவி குடும்பத்தினர் முக்கிய கோவில்களில் வழிபாடுகள், பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, சமீபத்தில் மந்த்ராலாயம் சென்று ராகவேந்திரர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
இந்த நிலையில், சிரஞ்சீவி இன்று காஞ்சிபுரம் வருகிறார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சதகண்டி ஹோமத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னைக்கு வரும் சிரஞ்சீவி அங்கிருந்து காரில் காஞ்சிபுரம் செல்கிறார்.
இந்த நிலையில் நேற்று காலை சதசண்டி ஹோமம் சப்தசசி பாராயணம் நடந்தது. இதில் 35 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த நடிகை சந்தனா கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சாஸ்திரி நடனம் அய்யர், அம்பாள் பிரசாரதங்களைக் கொடுத்து பட்டாடை அணிவித்தார்.
இன்று நடைபெறவுள்ள யாகத்திற்காக பெரிய ஹோம குண்டம் வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி வரை கோவிலில் சிரஞ்சீவி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications