எய்ட்ஸ் இருப்பதாக கூறி கல்யாணத்தை நிறுத்தியவர் கைது
சென்னை: காதலித்து வந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக நிச்சயித்த பெண் வீட்டாரிடம், எய்ட்ஸ் இருப்பதாக போலியான சான்றிதழை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரஞ்சிதாவுக்கும் முகலிவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பருக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. செப்டம்பர் 11ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சதீஷ் தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
திருமணத்துக்கு 58 பவுன் நகை, வெள்ளி சீர் வரிசை வழங்குவதாக பெண் வீட்டார் கூறியிருந்தனர். இந்நிலையில் மணமகள் ரஞ்சிதாவின் தந்தை ராஜேந்திரனிடம் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக சதீஷ் கூறியுள்ளார்.
இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியுற்றார். இருப்பினும் சதீஷின் பேச்சில் அவருக்கு சந்தேகம் தட்டியது. இதையடுத்து போலீஸில் புகார் செய்தார் அவர். போலீஸார், சதீஷ் சோதனை செய்து கொண்டதாக கூறப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் சதீஷ் மருத்துவப் பரிசோதனையே செய்து கொள்ளவில்ைல என்றும் அவர் பொய் பேசியுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து சதீஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் இப்படி பொய் சொல்லி திருமணத்தை நிறுத்த முயன்றதாக கூறினார்.
இதையடுத்து சதீஷை போலீஸார் கைது செய்தனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications