ஓகனேக்கல் திட்டத்தை நிறுத்தக் கோரி பிரதமரை சந்திக்க கர்நாடகம் முடிவு
பெங்களூர்: தமிழக அரசு ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அனைத்துக் கட்சி குழுவினருடன் முறையிடப் போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முனைந்துள்ளது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்த நிலையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரிடம் முறையிடப் போவதாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெகரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கர்நாடகம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் கர்நாடகத்தின் எதிர்ப்பையும் மீறி திட்டத்தை தொடரப் போவதாக தமிழகம் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி செப்டம்பர் முதல் வாரம், அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரை சந்தித்து கர்நாடகம் வலியுறுத்தும்.
நதி நீர்ப் பங்கீட்டில் மற்ற அனைத்து மாநிலங்களும் கர்நாடகத்துடன் சுமூகமாக இருக்கின்றன. ஆனால் தமிழகம் மட்டும்தான் பிடிவாதம் பிடிக்கிறது என்றார் பொம்மை.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications