குடைந்த நிருபர்கள்-பதில் சொல்லாமல் தப்பிய ராமதாஸ்
சென்னை: திமுக கூட்டணிக்கு பாமக திரும்புமா என்பது குறித்து நிருபர்கள் இன்று தொடர்ந்து கேள்வி கேட்டபோதும், பதிலளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார்.
இரண்டு நாளைக்குப் பின் இது குறித்து பேசுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று காலை பிரஸ் மீட்டுக்கு ராமதாஸ் அழைக்கவே, திமுக கூட்டணி குறித்துத் தான் ஏதோ சொல்லப் போகிறார் என நிருபர்கள் படையெடுத்தனர். வழக்கத்தைவிட அதிகமாக வட இந்திய மீடியாக்களும் அங்கு குவிந்தன.
ஆனால், மது ஒழிப்பு குறித்து ராமதாஸ் விளக்கமாக பேசினார். அவர் பேசி முடித்தபின் திமுக கூட்டணிக்கு பாமக திரும்புமா, மீண்டும் வருமாறு முதல்வர் அழைத்துள்ளாரே என நிருபர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க, இன்று மது ஒழிப்பு மட்டும் பேசுவோமே என்றார் ராமதாஸ.
ஆனாலும் விடாமல் நிருபர்கள் குடையவே, தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என இரு நாட்களுக்கு முன்னரே சொல்லி விட்டேனே என்று கூறிவிட்டுக் கிளம்ப முயன்றார்.
அவரை நிருபர்கள் விடவில்லை. தொடர்ந்து அதே கேள்வியைக் கேட்கவே, சிரிப்பை அடக்க முடியாத ராமதாஸ், இன்றைக்கு அரசியல் பேசப் போவதில்லை. இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் உங்களை சந்திக்கிறேன். அப்போது முழுக்க அரசியல் பேசுவோம்.. போதுமா என்று கூறிவிட்டு தப்பினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications