ஓராண்டுக்கு பின் பழனியில் மீண்டும் ரோப்கார்
பழனி: ஓராண்டுக்கு பிறகு பழனி மலையில் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் சேவை அடுத்த மாதம் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில். பழனி மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரோப்கார் சேவைத் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 26.8.2007ல் ரோப்கார் விபத்து ஏற்பட்டது. இரும்பு கம்பி பாதையில் இருந்து விலகிய ஒரு ரோப்கார் பின்னால் வந்த கொண்டிருந்த ரோப்கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஒரு ரோப்கார அறுந்து 250 அடி பள்ளத்தில் விழுந்தது. அந்த ரோப் காரில் பயணம் செய்த ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ரோப்கார் சேவை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பாதையை சீரமைக்கும் பணி உள்பட தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.1.50 கோடி செலவில் ரோப்கார் இயக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு ஆன நிலையில், ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி ரோப்கார் சேவை தொடங்குகிறது.
இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பராமரிக்க எளிதான வகையில் புதிய ரோப்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ரோப்கார் முறை முற்றிலும் மாற்றப்பட்டு புதிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
293 மீட்டர் தூரத்தை 150 விநாடிகளில் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்தில் 768 பேர் பயணம் செய்யலாம். ரோப்கார் இயக்கத்தில் புட்ஸ்விட்ச் அமைக்கப்பட்டுள்ளது.
7 இடங்களில் எமர்ஜென்ஸி சுவிட்களும், காற்றின் வேகத்தை கணக்கிட அளவீட்டு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications