ரங்கசாமி விலகினார் - புதிய முதல்வராகிறார் வைத்திலிங்கம்

ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் ஐந்து பேரும் போர்க்கொடி தூக்கினர். ரங்கசாமிக்கு எதிராக மத்திய அமைச்சர் நாராயணசாமியும் செயல்பட்டு வந்தார். இதனால் புதுவையில் கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டியது. அரசு நிர்வாகமும் ஸ்தம்பித்தது.
இதையடுத்து கட்சி மேலிடம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை நிரூபிக்குமாறு ரங்கசாமிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கூட்டப்பட்ட சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ரங்கசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
மேலும் முன்னாள் முதல்வரும், தற்போதைய அமைச்சருமான வைத்தியலிங்கம் முதல்வராக பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ரங்கசாமிக்கு ஆதரவாக அவர் உள்பட 2 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக அவர் உள்பட 6 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலிடப் பார்வையாளர்களான வயலார் ரவி, அருண்குமார் ஆகியோர் கட்சி மேலிடத்தில் தெரிவித்தனர்.
அந்த முடிவின்படி ரங்கசாமியை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் அறிவுறுத்தியது.
ரங்கசாமி ராஜினாமா:
இந்த நிலையில் கட்சி மேலிடத்தின் கட்டளையை ஏற்று ரங்கசாமி இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மாநில துணை நிலை ஆளுநர் குர்ஜாரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்திலிங்கம் சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க வைத்திலிங்கம் உரிமை கோருகிறார்.
ரங்கசாமி பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரி முழுவதும், குறிப்பாக ரங்கசாமியின் தொகுதியான தட்டாஞ்சாவடி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பதட்டம் இல்லாத ரங்கசாமி:
அதேசமயம், நேற்று முழுவதும் ரங்கசாமி வழக்கம் போல தனது பணிகளைக் கவனித்தார். சபாநாயகர் ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரைசந்தித்துப் பேசினார்.
மாலையில், கோரிமேடு மைதானத்திற்குச் சென்று டென்னிஸ் ஆடினார். மேலிட முடிவு குறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ள ரங்கசாமி, கட்சி முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications