இயக்குநர் சீமான் மீது வழக்கு-பாஜக முடிவு
கோவை: இயக்குநர் சீமான் இந்துக்கள் குறித்து மிக அவதூறாகப் பேசியதாக மீது குற்றம் சாட்டியுள்ள பாஜக அவர் மீது வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளது.
இது குறித்து பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீதர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை அருகே நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இந்து கடவுள்களை கேவலமாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி கிறிஸ்துவரான சீமான் பேசியுள்ளார்.
இதனால் டைரக்டர் சீமான் உள்ளிட்ட சிலர் மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.
ஆனால் அதற்கு பதிலாக சாதாரண இரு பிரிவுகளின் கீழ் போலீசார் டைரக்டர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேல் நடவடிக்கை எடுக்காமல் துடியலூர் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டு வருகின்றனர். காரணம் கேட்டால் மேலிட பிரஷர் என்று கூறுகின்றனர்.
அமைதியான தமிழகத்தை சீமான் போன்றவர்களின் பேச்சு சீர் குலைத்துவிடும்.
எனவே சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரி நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications