இன்டர்நெட் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் பிரசாரம்
சென்னை: இணைய தள குற்றங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், மாணவர்கள் பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஆர்.சேகர் தெரிவித்தார்.
சென்னை மாநகர காவல் துறையும், கூகுள் நிறுவனமும் இணைந்து மாணவர்கள் இணைய தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை 20 பள்ளிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் தொடக்க விழா ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸரம் பள்ளியில் நடைபெற்றது. பிரசாரத்தை தொடங்கி வைத்து, கமிஷனர் சேகர் பேசியதாவது:
இணைய தளத்தை மாணவ, மாணவிகள் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். இணையதளத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் தங்களது புகைப்படத்தையோ, போன் எண்களையோ மாணவர்கள் தரக்கூடாது.
கடந்த இரண்டு வாரங்களில் 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விசாரணையில் மிரட்டல் விடுத்ததாக 14 மாணவர்களை பிடித்துள்ளோம். யார் மிரட்டல் விடுத்தாலும் உடனே போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள்.
மாணவர்களின் வாழ்க்கை கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் முறையிடுகிறார்கள். சிலரை மன்னித்து அறிவுரை கூறி அனுப்புகிறோம். எனினும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் இதுவரை 4 மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு 347ஆக இருந்த இணையதள குற்றங்கள், 2007ம் ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் இதுபோன்ற குற்றங்களை தடுக்கலாம். இதை உணர்த்தவே இந்த பிரச்சாரம் நடத்தப்படுகிறது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications