பாகிஸ்தானில் நடக்கும் ஆட்சி நீடிக்காது-ஷெரிப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவர்களினஅ ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்து ஆட்சி செய்யும் வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணி அமர்த்துவது, வரும் 6ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தல் தொடர்பான பிரச்சனைகளால் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி தலைவர் நவாஸ் ஷெரிப் வாபஸ் பெற்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்து மீண்டும் ஆதரவு கோரினார். அதை நிராகரித்தார் ஷெரிப். இந்நிலையில் இன்று அவர் கூரியதாவது
பாகிஸ்தான் மக்கள் கட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் வாய்ப்பில்லை. பொது பிரச்சனைகள் குறித்து அக்கறைகாட்டாமல், கொள்கை பிடிப்பற்று, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால் இந்த அரசு சீக்கிரம் முடிவிக்கு வந்துவிடும்.
இந்த அரசை கவிழ்க்கும் காரியங்களில் எனது கட்சி இறங்காது. மக்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்து வருகிறது. அதனால் இந்த அரசு நிலைப்பது கடினம். மீண்டும் கூட்டணியில் சேர அழைப்பு வருகிறது. ஆனால் இனி அவர்களோடு கூட்டணி என்பது இயலாத காரியம்.
வரும் 6ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சையத் உஸ்ஸமான் சித்திக் நிச்சயம் போட்டியிடுவார். வேட்பாளரை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை. தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம். முன் கூட்டியே எந்த முடிவும் சொல்வது இயலாது.
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க கொள்கைகளை பிடித்து கொண்டு செயல்படுவதை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காண நாடாளுமன்றத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications