அக். 2 முதல் அலுவலகங்கள்-ஹோட்டல்களில் புகை பிடிக்க தடை
பெங்களூர்: அக்டோபர் 2 முதல் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், பப்கள் உள்ளிட்ட இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி கூறுகையில்,
காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் அலுவலகங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
தனியார் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் அன்று முதல் புகை பிடிக்க கூடாது. அப்படியே புகை பிடிக்க விரும்புவர்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி வெளியில் போய்த்தான் புகை பிடிக்க வேண்டும்.
ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். இனிமேலும் நிறுவனங்களில் புகை பிடிப்பதெற்கென தனி இடங்களை ஒதுக்க முடியாது.
சிறு ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகள், பப்கள், டிஸ்கோ அரங்குகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். 30 இருக்கைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்களில் புகை பிடிப்பதற்கென தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். அங்கு போதிய காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
புகை பிடிக்கும் தடையை மீறுவோருக்கு ரூ. 200 அபராதம் தற்போது விதிக்கப்படுகிறது. இதை தனி நபர்களுக்கு ரூ. 1,000 ஆகவும், அதை அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்த பரிசீலித்து வருகிறோம்.
புகை பிடிப்பதற்கு விதிக்கப்படும் தடை குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படும். இதுதொடர்பான விளம்பரங்களுக்கு பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்டோரும் பயன்படுத்தப்படுவர்.
மேலும் அனைத்து புகையிலை தயாரிப்புகளிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் படத்துடன் கூடிய எச்சரிக்கை வாசகமும் இடம் பெறும். இதுதொடர்பாக புகையிலை பொருள் தயாரிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாத கால அவகாசமும் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications