அண்ணா வாரிசுகளுக்கு கருணாநிதி ரூ. 40 லட்சம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அறிஞர் அண்ணாவின் வாரிசுகளுக்கு முதல்வர் கருணாநிதி ரூ. 40 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
சில நாட்களுக்கு முன் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது வாரிசுகளுக்கு திமுக சார்பில் ரூ. 40 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அவரது வாரிசுகளான மலர்வண்ணன், செளமியன், இளவரசி, இளங்கோவன் ஆகியோருக்கு ரூ. 10 லட்சத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அதே போல கெளவுதமனுக்கு ரூ. 10 லட்சத்தையும், பாபு மற்றும் அவரது மனைவி சாந்தா பாபு ஆகியோருக்கு ரூ. 10 லட்சத்தையும் கருணாநிதி வழங்கினார்.












Click it and Unblock the Notifications