மின்வெட்டு-போராட்டத்தில் குதிக்கும் வணிகர்கள்
வேலூர்: மின்வெட்டைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சார்பில் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
குடியாத்தம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுள்ளனர்.
தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேரவை சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
தவறான பொருளாதார கொள்கையால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது.
இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை கேஸ், மீதான விலை உயர்வு நடுத்தர ஏழை மக்களை பாதித்துள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வு மிகவும் அதிகமானது.
அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்காத அளவில் பொதுவான வரி உயர்வை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது நல்லெண்ணத்தை கெடுக்கும் வகையில் அவரது கட்சியை சேர்ந்த சிலரே இச் செயலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications