அதிமுகவுடன் கூட்டணி பரிசீலிக்கப்படும்: சிபிஐ
தூத்துக்குடி: மதசார்பற்ற கொள்கையில் அதிமுக உறுதியாக இருந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பரிசீலிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் வ.உ.சி சுதேசி கப்பல் கடலில் பயணித்த நூற்றாண்டு விழா நடந்தது. வ.உ.சி கல்வி குழு செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:
தன் வாழ்நாள் முழுவதையும் சுதந்திர போரட்டத்திற்காக அர்பணித்த முதல் தலைவர் வ.உ.சி.தான். வரலாற்றில் இடம் பிடித்த யாரும் செய்யத் துணியாத போராட்டத்தை துணிந்து செய்தவர். அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்கள் அனைவரும் அறிந்ததே.
சுதேசி கப்பல் இயக்கத்தை 1906ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவு செய்தார். 17.4. 907ம் ஆண்டு வெள்ளையர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் துணிந்து இரண்டு கப்பலகளை வாங்கி சுதந்திர முழக்கமிட்டார் வ.உ.சி. அதில் ஒன்று பயணிகள் கப்பல். மற்றொன்று சரக்கு கப்பல். இது உன்னதமான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
இந்தியாவில் முதன்முதலில் தொழிற்சங்கத்தை தொடங்கியவரும் அவர்தான் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியா, அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார்.
இதற்கு மத்திய அரசு என்ன பதில் கூறப்போகிறது. நாட்டின் மின் தேவையை அணு ஒப்பந்தம் பூர்த்தி செய்யும் என்பது உண்மையல்ல.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.1க்கு கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
அவற்றின் விலைகளை குறைப்பதற்கும், மின் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதசார்பற்ற கொள்கையில் அதிமுக உறுதியாக இருந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பரிசீலிக்கும் என்றார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications