கல்பாக்கம் அணு உலை-மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
சென்னை: கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட்டில் நாளை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குகிறது. இதனால் தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை இயற்கை யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்குகின்றன. இந்த இரு யூனிட்டுகளும் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.
தொடக்கத்தில் தலா 170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி திறன் 235 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5.28 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இயற்கை யுரேனியம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான அணு மின் நிலையங்களில் 220 மெகாவாட்டிற்கும் குறைவாக உற்பத்தி செய்யும்படி இந்திய அணுமின் கழகம் உத்தரவிட்டது.
இதையடுத்து கல்பாக்கத்தில் சமீபகாலமாக சராசரியாக தலா115 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது மின் உற்பத்தி நிறுத்தப்படும். கடந்த ஜூலை மாதம் இரண்டு யூனிட்டுகளிலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன் முதல் யூனிட்டில் பராமரிப்பு பணி முடிந்து மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதில் தினமும் 120 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இரண்டாவது யூனிட்டிலும் பராமரிப்பு பணி முடிவடைந்துள்ளது. இந்த யூனிட்டில் நாளை மின் உற்பத்தி தொடங்கப்படுகிறது. இதிலும் நாள் ஒன்றுக்கு 120 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும். எனவே மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications