அஞ்சல் நிலைய பெண் அதிகாரி மாயம்
சாத்தான்குளம்: அஞ்சல் நிலைய பெண் அதிகாரி காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சாத்தான்குளத்தை அடுத்த ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பால் வியாபாரி. இவரது மனைவி லில்லி எலிசபெத் ராணி. பழங்குளம் அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார்.
ஆனால் அன்று இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன், அலுலவகம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். எங்கு தேடியும் எலிசபெத் ராணியை கிடைக்கவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார்.
அதேபோல் சாத்தான்குளம் உபகோட்ட தபால் ஆய்வாளர் மாரியப்பனும் விடுமுறையில் சென்ற தபால் அதிகாரி லில்லி எலிசபெத் ராணி மீண்டும் பணிக்கு வரவி்ல்லை என்று போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எலிசபெத் கடத்தப்பட்டாரா என்று தேடி வருகின்றனர். உறவினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடன் விசாரணை நடந்து வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications