இலங்கையில் இந்திய படை - வாபஸ் பெறக் கோரி வி.சி. போராட்டம்
சென்னை: இலங்கையில் உள்ள இந்திய படையினரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 16ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட இலங்கை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்திய ராணுவத்தினர் சென்றிருப்பதாகவும், அவர்களில் சிலரும் இந்த தாக்குதலில் காயம் அடைந்து இருப்பதாக தெரிகிறது.
இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு வழங்கியுள்ள ரேடார் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ராணுவ வீரர்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் வரும்16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications