தேனி: கட்அவுட் விழுந்து அதிமுக தொண்டர் பலி
தேனி: தேனியில் அதிமுக பொதுக் கூட்டத்துக்காக வைக்கப்பட்ட கட் அவுட் முறிந்து விழுந்ததில் அக்கட்சித் தொண்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு அதிமுக சார்பில் தேனியில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு கட்சித் தொண்டர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
பொதுக் கூட்டம் நடக்கும் இடம் உள்பட நகரின் பல பகுதிகளில் கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கட்-அவுட் ஒன்று திடீரென முறிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது.
இதில் அக்கட்சியின் தொண்டர் சலீத் (65) என்பவர் படுகாயமடைந்தார். உயருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், கூட்டத்துக்கு போலீஸார், போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டியதில் நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருந்தது என்று அவர் கூறினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications