நெல்லை, மதுரையில் அரசு கேபிள் சேவை தொடங்கியது!
மதுரை: மதுரை மற்றும் நெல்லையில் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் சார்பில் தஞ்சை, கோவை, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை அமைத்து சேவையை தொடங்க அரசு தீர்மானித்தது.
அதன்படி தஞ்சை, கோவையில் கேபிள் டிவி சேவை தொடங்கி விட்டது. இந்த நிலையில், நேற்று முதல் நெல்லை மற்றும் மதுரையில் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கியது.
நெல்லையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு சேவை வழங்கபக்படுகிறது.
நெல்லையில் இதற்கான தொடக்க விழா நடந்தது. இதில் சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு நிறுவன அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டார்.
இதேபோல மதுரையில் நிறுவப்பட்டுள்ள அலுவலகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் தொடங்கி வைத்தார்.
விரைவில் சென்னையிலும் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications