நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைககள், வியூகம், கூட்டணி குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி பறிப்புகளும் நடக்கலாம்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடைசியாக கடந்த பிப்ரவரி 13ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இளைஞர்கள் பாசறை, இளம்பெண்கள் பாசறைகள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்த அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கிராமம் நகரங்கள் என்று இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைக்கப்பட்டு ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.
இந் நிலையில் நாளை மீண்டும் பொதுக் குழு, செயற்குழு கூடுகின்றன. இதில் ஜெயலலிதா மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வானதற்கு ஒப்புதல் அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications