தேமுதிக தொழிற்சங்க அலுவலகம் மீது இந்து மக்கள் கட்சி தாக்குதல்
கோவை: கோவையில் உள்ள தேமுதிக தொழிற்சங்க அலுவலகத்தை இந்து மக்கள் கட்சியினர் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு தாக்கப்பட்டது தொடர்பாக வடிவேலுவுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் உள்ள தேமுதிக தொழிற்சங்க அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியினர் திடீரென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலை நடத்திவிட்டு போலீஸில் அவர்கள் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களில் ஒருவரான கோவை இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமாரியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர் வடிவேலுவின் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து எனக்கு பல மிரட்டல்கள் வந்தன. அதனால்தான் தேமுதிக தொழிற்சங்க அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினோம் என்றார்.
இதுகுறித்து அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications