சென்னையில் 5 அரசு சொகுசுப் பேருந்துகள் எரிந்து சாம்பல்
சென்னை: சென்னை கலைஞர் கருணாநிதி நகர் அரசுப் பேருந்து டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து சொகுசுப் பேருந்துகள் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்தன.
கலைஞர் கருணாநிதி நகர் டெப்போவில் தினசரி சேவை முடிந்து நூற்றுக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் நிறுத்தப்படும். இந்தப் பேருந்துகளில் பல, சொகுசுப் பேருந்துகள் ஆகும்.
நேற்று இரவும் வழக்கம் போல பஸ்கள் அனைத்தும் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது இரவு 11 மணியளவில் ஒரு சொகுசுப் பேருந்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அதில் பிடித்துக் கொண்ட தீ அருகில் இருந்த மற்ற சொகுசுப் பேருந்துகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படை வீரர்கள் 30 பேர் 7 வண்டிகளில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 5 பேருந்துகள் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்து விட்டன.
இவற்றின் மதிப்பு ரூ. ஒன்றரை கோடியாகும். தீயைணப்புப் படையினர் விரைந்து செயல்பட்டதால், மற்ற பேருந்துகள் தப்பின.
முதலில் தீப்பிடித்த சொகுசுப் பேருந்தில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications