பாகி்ஸ்தானில் யுஎஸ் ஏவுகணை தாக்குதல்

இந்தப் பகுதி சுய ஆட்சி கொண்ட, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு பாகிஸ்தானின் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகாது. கிட்டத்தட்ட தனி நாடு போல செயல்படும் இந்தப் பகுதி தலிபான், அல்-கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் புகலிடமாக இருந்து வருகிறது.
இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான ஆளில்லா உளவு விமானங்கள் கண்காணித்து வருகின்றன. இந்த கண்காணிப்பின் அடிப்படையில் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான், இராக்கில் உள்ள தனது ராணுவத் தளங்கள் அல்லது அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணைகளை அமெரிக்கா ஏவி வருகிறது. சில நேரங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து கிளம்பி வரும் போர் விமானங்களும் நேரடியாக இந்தப் பிராந்தியத்தில் குண்டு வீசி தாக்கிவிட்டுப் போகின்றன.
இதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. இதை கண்டித்து குரல் கொடுப்பதோடு நிறுத்துக் கொள்கிறது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தப் பகுதியில் குசாலி தோரிகேல் என்ற இடத்தில் ஒரு வீட்டின் மீது இரு ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. இதில் அந்த வீட்டிலிருந்த 2 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் பலியாயினர்.
இந்த ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது யார் என்றும் தெரியவில்லை. ஆனால், இது அமெரிக்கத் தாக்குதல் தான் என பாகி்ஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியின் மீது பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்தே ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பெனாசீர் கொலை-முக்கிய தீவிரவாதி சாவு?:
இதற்கிடையே முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசர் புட்டோவின் கொலையை திட்டமிட்டு நடத்திய தலியான் இயக்கத்தின் தளபதியான பைதுல்லா மெஷ்சூத் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இதை தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications