ரூ. 50க்கு மளிகைப் பொருட்கள் திட்டம் தொடக்கம்

மகாத்மா காந்தி பிறந்த நாள் முதல் 10 மளிகைப் பொருட்களை ரூ. 50க்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்தார். இத்திட்டம் இன்று சென்னையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
மானிய விலையில் மளிகைப் பொருட்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மகாத்மாவின் பிறந்த நாளான இன்று இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இத்திட்டப்படி பத்து பொருட்களையும் வாங்கலாம் அல்லது தேவைப்படும் பொருட்களை மட்டும் கூட வாங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மாதம் ஒருமுறை இதை வாங்கிக் கொள்ளலாம்.
சென்னையில் 14 இடங்களில் 3ம் தேதி இத்திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். அமைச்சர் ஸ்டாலின் ேசப்பாக்கத்திலும், துறைமுகத்தில் அன்பழகனும், அண்ணா நகர் தொகுதியில் ஆற்காடு வீராசாமியும் தொடங்கி வைப்பார்கள்.
வழங்கப்படும் பொருட்கள்
மஞ்சள் தூள் 50 கிராம் - ரூ. 2.
மல்லித்தூள் 250 கிராம் - ரூ. 18.
மிளகாய்த்தூள் 250 கிராம் - ரூ. 14
கடலைப் பருப்பு 75 கிராம் - ரூ. 3
வெந்தயம் 25 கிராம் - ரூ. 1.
கடுகு 25 கிராம் - ரூ. 1.
சோம்பு 25 கிராம் - ரூ.1.50
மிளகு 25 கிராம் - ரூ. 3.
சீரகம் 50 கிராம் - ரூ. 5.50
பட்டை -லவங்கம் 10 கிராம் - ரூ. 2
இதுமட்டுமல்லாமல், முன்பு அறிவிக்கப்பட்டதை மாற்றி சில பொருட்களின் எடை கூட்டப்பட்டுள்ளது. அதன்படி மல்லித்தூள் உள்ளிட்டவற்றின் எடை கூட்டப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications