For Quick Alerts
For Daily Alerts
Just In
தலாய் லாமா டெல்லி மருத்துவமனையில் அனுமதி - இன்று ஆபரேஷன்

தலாய் லாமா கடுமையான வயிற்று வலி காரணமாக டெல்லியில் சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 73 வயதாகும் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே இதே பிரச்சனை காரணமாக மும்பையில் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த செப்டம்பர் முதல் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஓய்வெடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து கங்கா ராம் மருத்துவமனையில் செக் அப் செய்து கொண்டு வந்தார். இந்நிலையில் மீண்டும் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.