நானோ: எல்லாப் புகழையும் தானே தட்ட முயல்கிறார் மோடி - காங்.
அகமதாபாத்: நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு வந்துள்ளதற்கு தான்தான் முழுக் காரணமும் என்பது போல முதல்வர் நரேந்திர மோடி பேசுவது கண்டனத்துக்குரியது என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அர்ஜூன மோத்வாடியா கூறுகையில், நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு வந்துள்ளதற்கு பாஜகவும், அதன் பரிவாரங்களும் கொடுத்துள்ள மிகப் பெரிய வரவேற்பும், மிகப் பெரிய சலுகைகளும், ஏதோ குஜராத் மக்களுக்கு டாடா நிறுவனம் அனைத்தையும் இலவசமாகவே தரப் போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நானோ வருகையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால் மோடி, ஏதோ தன்னால்தான் இதெல்லாம் நடந்தது என்பது போல நடந்து கொள்கிறார். இதை காங்கிரஸ் கண்டிக்கிறது. அத்தனை பெயரையும் அவரே எடுத்துக் கொள்ள முயலுகிறார்.
மிகக் குறைந்த விலையில் விவசாய பல்கலைக்கழகத்தின் நிலத்தை டாடா நிறுவனத்திற்கு மோடி அரசு கொடுத்துள்ளது. அதேபோல டாடாவுக்கு கொடுத்த அதே அளவிலான சலுகைகளை பிற நிறுவனங்களுக்கும் கொடுக்க மோடி முன்வர வேண்டும்.
டாடா போன்ற பெரிய நிறுவனங்குக்குப் பரிவு காட்டுவதற்குப் பதில் நலிவடைந்த நிலையில் உள்ள ஜெட்பூர் சேலை நிறுவனங்கள், ராஜ்கோட்டில் உள்ள பொறியியல் நிறுவனங்கள், சூரத்தில் உள்ள வைர ஆலைகள், ஜவுளி ஆலைகளுக்கு மோடி அரசு அதிக அக்கறையும், சலுகையும் காட்ட வேண்டும்.
இந்த நிறுவனங்களுக்கு மோடி அரசு எந்தவித சலுகையும் கொடுப்பதில்லை. டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கருத்தையும் மோடி அரசு அறிந்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்பு மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இதற்கு சிங்கூர் அனுபவமே நல்ல பாடமாகும் என்றார் அவர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications