கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினரை விடுவிக்க ராம.கோபாலன் கோரிக்கை
சென்னை: தேவாலயங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரத்தில், சென்னை நெடுஞ்சாலையில், காட்பாடி ரயில்வே கேட் அருகில் சிலுவைகளை உடைத்ததாக கண்ணன், துரை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் கண்ணன் திமுக வார்டு கவுன்சிலராவார். உண்மை இப்படி இருக்க, சிலுவைகள் உடைக்கப்பட்ட உடன், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற இந்து முன்னணி தொண்டர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் பல மணிநேரம் அடைத்து வைத்துள்ளனர்.
ஓசூர் அருகே உள்ள மதகொண்டபள்ளியில் தேவாலயம் தாக்கப்பட்டதை அடுத்து அந்தோணியப்பா மகன் சின்னப்பன் என்ற கிறிஸ்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கும் இந்து விரோதிகள் இந்து முன்னணி மீது புகார் கூறி போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளனர். என்றபோதிலும், முன் விரோதம் காரணமாக சின்னப்பன்தான் தேவாலயத்தை சேதப்படுத்தினார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இவர்கள் இந்துக்களை மத மாற்றம் செய்வதுடன் தங்களுக்குள்ளேயே ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு தேவாலயத்தை மற்றொரு பிரிவினர் தாக்குகின்றனர். உண்மை இப்படி இருக்க தீர விசாரிக்காமல் இந்து முன்னணி தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். விசாரணையில் உண்மை தெரிந்த பின் அவர்களை விட்டு விடுகின்றனர். ஆனால், அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்பதில்லை.
சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி வருகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் தேவாலய தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி தொண்டர்களை உடனே விடுதலை செய்து அவர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தின் அமைதிக்கு விரோதமாக தினந்தோறும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதை கிறிஸ்துவ பாதிரியார்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications