லிப்ஸ்டிக் போட்டதால் சிறுமி எரிப்பு-முதியவர் ஆத்திரம்
ஜெய்ப்பூர்: லிப்ஸ்டிக் போட்டதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டு முதியவர் 11 வயது சிறுமியை தீவைத்து எரித்தார். அந்த சிறுமி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெய்ப்பூரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிறுமி நஸ்மின் (11). இவரது பக்கத்து வீட்டுக்காரர் சலீம் (55). நஸ்மின் குடும்ப நண்பர். நஸ்மின் உள்பட அப்பகுதி குழந்தைகள் அவரது வீட்டுக்கு சென்று விளையாடுவது வழக்கம்.
அவரும் குழந்தைகளுக்கு ஸ்வீட், சாக்லெட் கொடுப்பார். இதனால் குழந்தைகள் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்கள். நஸ்மின் சலீமை தாத்தா என்று அன்புடன் அழைப்பார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நஸ்மின் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு சலீம் வீட்டுக்கு சென்றார். லிப்ஸ்டிக் போட்ட கொண்டதை பார்த்து ஆத்திரமைடந்த சலீம் நஸ்மினை தீவைத்து கொளுத்தியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து தீயில் எரிந்து கொண்டிருந்த நிலையில் நஸ்மீனை முகமது சலீம் குரேஷி என்பவர் மீட்டுள்ளார்.
90 சதவீத தீக்காயங்களுடன் கதறித் துடித்த நஸ்மின் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டு பேசுகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நஸ்மினை சலீம் பாலியல் கொடுமை செய்துள்ளார். இதனால் அலறிய நஸ்மீனை கொலை செய்யவதற்காக அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் என்று எஸ்பி மோகன் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications