தற்கொலை மிரட்டல்: காணாமல் போன மாணவி் கதி?
சென்னை: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு காணாமல் போன மாணவியை போலீஸார் தேடி வருகின்றனர். அவரது செல்போன் மற்றும் ஹேன்ட் பேக் கடற்கரையில் கிடைத்ததை அடுத்து அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மோகன்பிரபு. இவரது மகள் சுவாதி (21). சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லுரியில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லுரி விடுதியில் தங்கி படித்து வரும் சுவாதி கடந்த சில நாட்களாக சோகமாக காணப்பட்டார். தற்போது படிக்கும் பாடப்பிரிவு கடினமாக இருப்பதாகவும், வேறு பிரிவில் சேர்த்து விடும்படியும் பெற்றோரிடம் கூறி உள்ளார். ஆனால் பெற்றோர் அவரை கட்டாயபடுத்தி படிக்க வைத்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில் நேற்று திடீரென்று சுவாதி காணாமல் போனார். அவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் ஷாப்பிங் செல்வதாக எழுதி இருந்தார்.
பின்னர், தனது தோழிக்கு போன் செய்த சுவாதி, நான் நீலாங்கரையில் உள்ள சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன். எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தோழி போலீஸூக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சுவாதியை தேடினர். அப்போது நீலாங்கரை கடற்கரையில் சுவாதியின் செல்போனும் ஹேண்ட் பேக்கும் கிடந்தது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு எங்கும் சென்றுவிட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications