ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு
Subscribe to Oneindia Tamil

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டன.இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
தலைநகர் சென்னையின் உட்புறங்களில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. புறநகர்களில் பெரும்பாலான பகுதிளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த கடையடைப்புப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
வெள்ளையன் கைது:
இதற்கிடையே வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், கடைகளை அடைக்குமாறு கூறி மிரட்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications