விமான நிறுவனங்களின் இழப்பை சரிகட்ட சுங்கவரி ரத்து!
டெல்லி: விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் விதத்தில் விமான எரிபொருள் மீதான 5 சதவீத சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
மேலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 16.8 சதவீத அளவிற்கு குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதையடுத்து, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் புதுடெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலையில் ரூ.9,429.87 குறைத்து, ரூ.47,017.93 ஆக ஆக்கியுள்ளன.
தற்போது சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு மேலும் ரூ.1,800 முதல் 2,000 வரை குறைய வாய்ப்புள்ளது.
இந்தியாவில், விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் இழப்பைச் சந்தித்து வருகின்றன. விமானப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, விமான எரிபொருள்களின் மீதான 5 சதவீத சுங்க வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது.
விரிவாக்க திட்டம்
உள்நாட்டிற்குள் விமான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், ஒரு கிலோ லிட்டர் (1,000 லிட்டர்) விமான எரிபொருளின் விலை ரூ.36,000 ஆக இருக்கும் என திட்டமிட்டு, விரிவாக்கத்தை மேற்கொள்ள முடிவு செய்திருந்தன.
ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.57,000 என்ற அளவில் உயர்ந்தது. தற்போது இதன் விலை சுமார் ரூ.10,000 வரை குறைத்துள்ளது பெட்ரோலியத்துறை.
மேலும் விமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய எரிபொருள்களுக்கான கட்டண பாக்கியை செலுத்தும் காலத்தை 60 நாள்களிலிருந்து 90 நாள்களாக நீட்டித்துள்ளது. மேலும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆறு தவணைகளில் செலுத்தும் வகையிலும் வழி வகை செய்துள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications