பொருளாதார சிக்கல் இப்போதைக்கு தீராது-பிரதமர்

சர்வதேச பொருளாதார மந்தம், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை குறித்து இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அவர்களிடம் பேசினார்.
இதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா அதிபர் ஆனந்த் மகிந்த்ரா, ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் காமத், ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், எச்டிஎப்சி வங்கித் தலைவர் தீபக் பரேக், டிஎல்எப் தலைவர் சிங், எஸ்ஸார் நிறுவன அதிபர் சசி ருயா, வீடியோகான் அதிபர் ராஜ்குமார் தூத்,
சிஐஐ தலைவர் காமத், எப்ஐசிசிஐ தலைவர் ராஜிவ் சந்திரசேதர், அசோசாம் தலைவர் சஞ்ஞன் ஜிந்தால்,
நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சி்ங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிதி குறைந்துவிட்ட நிலையில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர்.
வங்கி அதிபர்கள் பேசுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். வட்டி விகிதம் மேலும் குறைய வேண்டும் என்றனர்.
அவர்களிடையே கவலையோடு உரையாடிய பிரதமர், அமெரிக்கா உள்பட சர்வதேச அளவிலான இந்த சி்க்கலில் இருந்து நமது பொருளாதாரமும் தப்பிக்க முடியாது.
இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாகவும் வாய்ப்புண்டு. மேலும் நிலைமை சீராக நீண்ட காலம் பிடிக்கலாம்.
நிதி நெருக்கடியால் இந்திய நிறுவனங்களில் முதலீடுகள் குறைய ஆரம்பித்துவிட்டன. வங்கிகளுக்கும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரணமான சூழ்நிலையை சமாளிக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது செலவுகளைக் குறைத்து நிதி நிலையை சீர்செய்ய வேண்டும். பண பரிமாற்றங்கள் நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும். வங்கிகளுக்கு அரசு பக்க பலமாக இருக்கும். டெபாசிட்தாரர்களின் முதலீடுகள் பத்திரமாக உள்ளன. இதில் அச்சப்படத் தேவையில்லை.
பணப் புழக்கத்தை மேலும் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும், வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் முயல்வோம் என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications