ராஜ் தாக்கரே தலைக்கு ரூ.51 லட்சம்!
லூதியானா: ராஜ் தாக்கரே தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் பரிசு அறிவித்துள்ளது அகில பாரதீய பூர்வாஞ்சல் விகாஸ் பரிஷத்.
மராட்டியத்தில் வாழும் வடமாநில மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி வருவதாக ராஜ்தாக்கரே மீது புகார் எழுந்து உள்ளது. இந்த நிலையில், பிற மாநிலங்களில் குடியேறி உள்ள இந்தி பேசும் தொழிலாளர்கள் கூட்டமைப்பான அகில பாரதீய பூர்வாஞ்சல் விகாஸ் பரிஷத் என்ற அமைப்பு ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
காஜியபாத், மும்பை, நொய்டா, லூதியானா போன்ற இடங்களில் இந்த அமைப்புக்கு கிளைகள் உள்ளன. அதில் லூதியானா கிளை சார்பாக, ராஜ் தாக்கரே தலையை கொண்டு வருபவருக்கு ரூ.51 லட்சம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் மிஸ்ரா, இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், ராஜ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் யாரையாவது பார்த்தால் உயிருடன் எரித்து கொல்ல வேண்டும் என்றும் பீகாரைச் சேர்ந்த ராகுல் ராஜ் போல ஒவ்வொருவரும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் சங்க உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த அமைப்புக்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications