மத்திய அரசு அநீதி இழைக்கவில்லை: வாசன்
அரியலூர்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அநீதி இழைத்து விட்டதாக குற்றம் சாட்டுவது சரியல்ல. போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக மத்திய புள்ளியல் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே இளாக்குறிச்சியில், மூப்பனார் சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது தற்போது நடந்து வரும் தாக்குதலை மத்திய அரசு முழுமையாக எதிர்க்கிறது.
விரிவான பேச்சுவார்த்தையே பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி என்பதில் மத்திய அரசு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மூலமாக இந்த உதவிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் சில தமிழக கட்சிகள், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்கள் உதட்டளவில் தான் இந்தப் பிரச்சினையை அணுகுகின்றனர். மனதளவில் அணுகவில்லை.
வெவ்வேறு விதமாக பேசி இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம் என அரசியல் கட்சித் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் வாசன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications