கத்தாரில் பிரதமர் மன்மோகன் சிங்
தோஹா: தனது ஓமன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை கத்தார் வந்தார். கத்தார் மன்னர் சேக் ஹமீத் பின் கலீபா அல் தானியுடன் பிரதமர் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
இரு நாடுகளும் பாதுகாப்பு, கேஸ் சப்ளை தொடர்பாக 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன.
பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங்கும் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
பிரதமருடன் வந்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, எரிவாயு சப்ளை குறித்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தார்.
இப்போது ஆண்டுதோறும் இந்தியா 7.5 மில்லியன் டன் எரிவாயுவை கத்தாரிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இதை 10 மில்லியன் டன்னாக உயர்த்த இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்யவுள்ளன.
அதே போல வெளிநாட்டு இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, அங்கு வசிக்கும் இந்தியர்களின் விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். கத்தாரில் 4.2 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முன்னதாக பிரதமரின் ஓமன் பயணம் பெரும் வெற்றி பெற்றதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இரு நாடுகளும் இணைந்து கூட்டு நிதியத்தை உருவாக்கியிருப்பது மிகப் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாகவும் மேலும் பல விவகாரங்கள் தொடர்பாகவும் ஓமன் மன்னர் கபூஸ் பின் சைத் அல் சைதுடன் பிரதமர் 4 மணி நேரம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஓமனில் 5 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஓமன், கத்தாரை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் நாடுகளுடன் (6 நாடுகள்) இந்தியா வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ஓமன் நாட்டு மன்னர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதை பிரதமர் ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளார்.
இன்று மாலை பிரதமர் நாடு திரும்புகிறார். கத்தார் சென்ற முதல் இந்தியப் பிரதமர் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications