ப.சிதம்பரம் ஆலைக்கு பாயும் மின்சாரம்-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட புதுவயல், கண்டனூர், பள்ளத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு தேவகோட்டை மின் நிலையம், மேலமணக்குடி துணை மின் நிலையம், காணாடுகாத்தான் துணை மின் நிலையம் ஆகியவற்றின் மூலமாக மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது.
தற்போது கடும் மின் வெட்டு காரணமாக, மேற்படி மின் நிலையங்களில் இருந்து அரிசி ஆலைகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்த மின்சாரம், ப.சிதம்பரத்துக்கு வேண்டியவர்கள் நடத்தும் சித்திவயலில் உள்ள 2 அண்ணாமலை காகித ஆலைகள் மற்றும் ஊரவயலில் உள்ள அண்ணாமலையார் காகித ஆலைக்கு தங்கு தடையின்றி வினியோகிக்கப்படுகிறது.
ப.சிதம்பரத்தின் சுயநலப் போக்கு காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நெல்லை, அரிசியாக ஆக்க முடியாத நிலைக்கு அரிசி ஆலைகள் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் விளைவாக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ரூ. 10 கோடிக்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக அரிசி ஆலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், காரைக்குடி அமராவதி புதூர் தொழிற்பேட்டையில் உள்ள காகித கப், ஸ்டீல் பர்னிச்சர், லெதர் பெல்ட் தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
அரியக்குடியில் உள்ள வெண்கல, பித்தளை விளக்கு தொழிற்சாலைகள், கண்டனூர், காரைக்குடி, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள வெள்ளி பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள், தங்க நகைத் தொழிற்கூடங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் நாளை காலை 10 மணியளவில், சாக்கோட்டை ஒன்றியம், புதுவயலில் உள்ள புதிய பேருந்து நிலைய நெல்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications