பிரச்சனைகளை விவாதிக்க அவகாசம் தருவதில்லை: சிபிஎம்
கோவில்பட்டி: சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க போதிய அவகாசம் தருவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட வரதராஜன் பேசியதாவது
கடந்த பல மாதங்களாக கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள், பஞ்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர்.
சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க போதிய அவகாசம் தருவதில்லை.
அமெரிக்காவில் ஏற்பட்டு உலகையே தாக்கி வரும் பொருளாதார நெருக்கடி
தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இப்பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் அணுகுமுறை திருப்தியளிப்பதாக இல்லை.
இன்றைக்கு மத்திய அரசு சிறு வணிகத்திலும் கூட வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களை உள்ளே அனுமதித்து பல லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறது.
தொழில் நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் கூட மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை நடைபெறுகிறது. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை தீப்பிடித்து எரிகிறது.
சென்னையில் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டபோது காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தது மனித தன்மையற்ற செயலாகும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications