டெல்லி சட்டசபைக்கு நாளை தேர்தல்-பலத்த பாதுகாப்பு
டெல்லி: மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் நாளை நடைபெறவுள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு மிக பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபையில் உள்ள 70 சீட்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜேந்திரா நகர் தொகுதி பாஜக வேட்பாளரான நடப்பு எம்.எல்.ஏ பூரன் சந்த் யோகி தற்கொலை செய்து கொண்டு விட்டதால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 69 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலால் நாளைய டெல்லி வாக்குப்பதிவுக்கு மிக பலத்த பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி 70 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 1.7 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். 863 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 65 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான அகாலிதளம் 4 சீட்களிலும் போட்டியிடுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி 69 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
முதல்வர் ஷீலா தீட்சித் 3வது முறையாக காங்கிரஸை அரியணையில் அமர்த்த மும்முரமாக உள்ளார்.
காங்கிரஸ் சார்பில் ஷீலா தீட்சித்தும், பாஜக சார்பில் வி.கே.மல்ஹோத்ராவும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications