பாக். தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம்: அமெரிக்கா
நியூயார்க்: மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் முழுக்காரணம் என்பது உறுதியாக தெரிய வந்தால், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளின் பேச்சை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால், அமெரிக்க உளவுப் பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாதான் மும்பை தாக்குதலுக்குக் காரணமாக இருக்க முடியும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
லஷ்கர் அமைப்புக்குத்தான் கடல் மார்க்கமாக ஊடுறுவும் திறமை உள்ளது. மும்பையில் நடந்த திட்டமிட்ட தாக்குதலைப் பார்க்கும்போது லஷ்கர் அமைப்புதான் இதைச் செய்திருக்க முடியும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியுள்ள தீவிரவாதி கொடுத்துள்ள தகவல்களும் இதை நம்புவதற்கு போதுமான சாட்சியமாக உள்ளது.
மேலும் தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் இந்திய செல்போன்களையும், சாட்டிலைட் போன்களையும் பயன்படுத்தவில்லை. பாகிஸ்தானிலிருந்துதான் அவர்களுக்கு போன்கள் வந்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில் இதுதொடர்பான வலுவான ஆதாரங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தால், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
காஷ்மீர் எல்லையையொட்டி உள்ள இந்த முகாம்கள் குறித்து பாகிஸ்தான் அரசு இதுவரை கண்டும் காணாமலும் உள்ளது என்று அவர் கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications