தீவிரவாதப் பிரச்சினை குறித்து ஐ.நா.வில் முறையிட வேண்டும்: சிபிஎம்
டெல்லி:மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தால் இப்பிரச்சனையை மத்திய அரசு ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் நவம்பர் 29, 30 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மும்பை பயங் கரவாத தாக்குதல் தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:
மும்பையில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்கு தலிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு உடனடியாக தவறுகளை பொருத்தமான முறையில் சரி செய்து கொள்ள வேண்டும். நாட் டின் பல பகுதிகளிலும் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள், நமது உளவுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பலவீனம் இருப்பதை காட்டுகிறது.
உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்து வதற்கு தேவையான நட வடிக்கைகளை அரசிட மிருந்து நாடு எதிர்பார்க் கிறது. இந்த கொடும் குற்றத் தை இழைத்த நபர்களுக்கு உள்ள வெளிநாட்டு சக்தி களின் தொடர்பு குறித்து கண்டறிய தேவையான நட வடிக்கைகள் துவக்கப்பட வேண்டும்.
எந்தவொரு பிளவுபடுத் தும் சக்திகளின் மூலம் உரு வாகின்ற இத்தகைய சூழ லில் அனைத்து தரப்பு மக்க ளும் அரசியல் பிரிவுகளும் ஒன்றுபட்டு நிற்க வேண் டும்; பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்து நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும் என்று அரசியல் தலை மைக்குழு ஏற்கெனவே நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
புலனாய்வுக்குப்பிறகு, இந்த கொடிய பயங்கர வாதத்தை நடத்திய நபர்கள் பாகிஸ்தான் தொடர்புள்ள வர்கள் என்பதற்கான ஆதா ரங்கள் கிடைக்கப்பெறு மானால், மத்திய அரசு இப்பிரச்சனையை ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன் சிலுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் திற்கு எதிரான தீர்மானத் தில்(1373), அனைத்து நாடு களும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்றும், 'பயங்கரவாத செயல்களை செய்வோர்க்கு பாதுகாப்பான இடமாக இருப்பது அல்லது அதற்கு நிதி உதவி செய்வது அல்லது திட்டமிட்டுக் கொடுப்பது அல்லது ஆதரிப்பது' போன்ற வற்றுக்கு இடமளிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய பயங்கரவாத செயல் களை கண்டறிந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கை களை பாதுகாப்பு கவுன்சில் தீர்மானிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications