தவறுதலாக சுட்ட சச்சினின் காவலர்

சந்திராசென் சிக்வான் என்ற அந்த 39 வயது காவலர் மும்பை போலீசின் சிறப்புப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழை காலை டூட்டிக்கு வந்தபோது 9 எம்எம் பிஸ்டலை கையில் எடுத்தபோது தவறுதலாக சுட்டுவிட்டார். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது.
இந்த சத்தம் கேட்டு டெண்டுல்கரும் அவரது மனைவி அஞ்சலியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து காம்பவுண்டுக்கு வெளியே ஓடினர். இது போலீஸ் தவறாக சுட்ட குண்டு என்று தெரிந்த பின்னரே அமைதியாயினர்.
தூங்க முடியாமல் தவித்தேன்:
இதற்கிடையே மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாண்டவத்தைப் பார்த்து தூங்க முடியாமல் தவித்ததாக டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அன்று போட்டி முடிந்த பிறகு அனைவரும் ரிலாக்ஸ் ஆக இருந்தோதுதான் தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்தி வந்தது. அதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
டிவிகளில் தீவிரவாதிகளின் தாக்குல் குறித்த செய்திகளைப் பார்த்து நான் மேலும் வேதனை அடைந்தேன்.
சொந்த நாட்டைச் சேர்ந்த சக சகோதரர்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.
என்னால் அன்று இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. சிதறிக் கிடந்த உடல்களின் படங்கள் இன்னும் என் கண் முன்பாக நிழலாடி வருகின்றன.
இது மும்பை மீதான தாக்குதல் மட்டுமல்ல, நமது நாட்டின் மீதான தாக்குதல்.
தீரமிக்க ராணுவ வீரர்கள், என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், கடற்படை கமாண்டோக்கள், மும்பை போலீஸார், தீயணைப்புப் படையினர், தீவிரவாதிகள் தாக்கிய ஹோட்டல்களின் ஊழியர்கள், ஏராளமான அதிகாரிகள், ஜவான்கள் என பலரையும் நாம் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும், சல்யூட் செய்ய வேண்டும். அனைவரும் தீயின் விளிம்பிலிருந்து பல உயிர்களைக் காத்துள்ளனர். அவர்களை நான் வணங்குகிறேன் என்று கூறியுள்ளார் சச்சின்.












Click it and Unblock the Notifications