செங்கோட்டை கோர்ட்டில் எஸ்எஸ்.சந்திரன் சரண்
செங்கோட்டை: முன்னாள் அதிமுக எம்.பியும், நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் இன்று செங்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.
செங்கோட்டையில் கடந்த 6-08-08 அன்று காந்தி சிலை முன்பு அதிமுக சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் எஸ்எஸ் சந்திரன் தமிழக முதல்வர் கருணாநிதியை மிகவும் தரக்குறைவாகவும், பொது அமைதிக்கு பங்கம் வகிக்கும் வகையிலும் பேசியதாக 7-8-08 அன்று திமுக பேச்சாளர் சக்தி வேல் என்பவர் புகார் செய்தார்.
புகாரை தொடர்ந்து 17-11-08 அன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் நடிகர் எஸ்எஸ்சந்திரன் இன்று காலை 10.20க்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயக்குமார் முன்பு சரண் அடைந்தார்.
பின்னர் அதிமுக பிரமுகர்கள் லிங்கம், சுப்புராஜ் ஆகியோர் ஜாமீன் உத்திரவாதம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து நீதிபதி ஜெயக்குமார் நடிகர் எஸ்எஸ் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கினார்.
அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் மாடசாமி, வெங்கடேஷன், கார்த்திகேயன், ஆதிபாலசுப்பிரமணியன் உள்பட 7 பேர் ஆஜர் ஆகினர்.
முன்னதாக கோர்ட்டுக்கு சரணடைய வந்த எஸ்.எஸ்.சந்திரனுக்கு மாவட்ட செயலாளர் பி.செந்தூர்பாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்













Click it and Unblock the Notifications