வலுவிழந்தது புயல் சின்னம் - கன மழை மட்டும் பெய்யும்

வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழக கடலோரப் பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்திருந்தனர்.
இந்தப் புயல் சின்னத்தின் விளைவாக நேற்று இரவு முதல் தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த புயல் சின்னம் திடீரென வலுவிழந்து காற்றழுத்த தாழியாக மாறி விட்டது. இது தற்போது அதிராம்பட்டனத்திற்கு 450 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 600 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு வடக்கு நோக்கி நகர்ந்து தூத்துக்குடிக்கும், நாகைக்கும் இடையே, தொண்டி அருகே நாளை காலை கரையைக் கடக்கும்.
புயல் சின்னம் வலுவிழந்து விட்டாலும் கூட கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் பலத்த காற்று வீசும். கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீ்னவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications